/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இளங்கோ பள்ளியில் விளையாட்டு தின விழா
/
இளங்கோ பள்ளியில் விளையாட்டு தின விழா
ADDED : ஜன 25, 2024 06:40 AM
கோவை : இளங்கோ பள்ளி விளையாட்டு தின விழாவை முன்னிட்டு, மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தி, பரிசுகள் வழங்கப்பட்டன.
விளையாட்டு விழாவை முன்னிட்டு, மாணவ - மாணவியர் நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டு 100மீ., 200மீ., 400மீ., தொடர் ஓட்டம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடந்தப்பட்டன. இதில் அதிக போட்டிகள் வெற்றி பெற்ற, நீல நிற அணி ஒட்டுமொத்த சாம்பியன் கோப்பையை வென்றது.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, சர்வதேச தடகள வீராங்கனை பரிசுகளை வழங்கினார். இளங்கோ அறக்கட்டளை தலைவர் ஆறுமுகம், பொருளாளர் சுப்பிரமணியம், பள்ளி தாளாளர் மாணிக்கம், செயலாளர் செந்தில்குமார், முதல்வர் ராஜாங்கம் உள்ளிட்டோர் பரிசளிப்பு விழாவில் பங்கேற்றனர்.