/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஸ்ரீநாராயணகுரு கல்லுாரியில் விளையாட்டு தின விழா
/
ஸ்ரீநாராயணகுரு கல்லுாரியில் விளையாட்டு தின விழா
ADDED : மார் 18, 2024 12:46 AM
கோவை;ஸ்ரீ நாராயணகுரு கல்லுாரியின், 28வது விளையாட்டு தினம் மற்றும் ஆண்டு விழா கல்லுாரி வளாகத்தில் கொண்டாடப்பட்டது.
விழாவுக்கு, நாராயணகுரு கல்வி அறக்கட்டளையின் செயலாளர் ராஜ்குமார் தலைமை வகித்தார். அதிவிரைவு படை துணை கமாண்டன்ட் (ஆர்.ஏ.எப்.,) ஜின்சி பிலிப் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
மாணவர்கள் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என நான்கு அணிகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் தெற்கு அணி 158 புள்ளிகள் எடுத்து ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றது. தொடர்ந்து, வடக்கு அணி 88 புள்ளிகள் எடுத்து இரண்டாமிடத்தை பிடித்தது.
மாணவர்கள் பிரிவில் மெல்வின், ஜினோ மேத்யூ; மாணவியர் பிரிவில் சுவாதி, அவிலா ஆகியோர் தனிநபர் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றனர்.

