/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஏ.ஆர்.பி., பள்ளியில் விளையாட்டு விழா
/
ஏ.ஆர்.பி., பள்ளியில் விளையாட்டு விழா
ADDED : நவ 06, 2025 11:09 PM

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, ஜமீன்முத்துார் ஏ.ஆர்.பி., இண்டர்நேஷனல் பள்ளியில், 13வது சீனியர் பிரிவு மாணவர்களுக்கான விளையாட்டு விழா நடந்தது. பள்ளி தாளாளர் சுப்ரமணியம் தலைமை வகித்தார். முன்னதாக, பள்ளி இயக்குனர் அரசு பெரியசாமி வரவேற்றார்.
எஸ்.டி.சி., முதல்வர் வனிதாமணி கலந்து கொண்டு பேசுகையில், ''குழந்தைகளின் வளர்ப்பில் பெற்றோர்களின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. பள்ளிகள்தோறும் விளையாட்டிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். நேரத்தை வீணாக்காமல் லட்சிய பாதை நோக்கி பயணிக்க வேண்டும்,'' என்றார்.
தொடர்ந்து, மாணவ, மாணவியர் இடையே பல்வேறு நிலைகளில் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன. பள்ளி செயலாளர் தமிழ்செல்வன், பள்ளி நிர்வாகிகள் மகேஸ்வரி, தங்கமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

