/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அவினாசிலிங்கம் பெண்கள் பள்ளியில் விளையாட்டு விழா
/
அவினாசிலிங்கம் பெண்கள் பள்ளியில் விளையாட்டு விழா
அவினாசிலிங்கம் பெண்கள் பள்ளியில் விளையாட்டு விழா
அவினாசிலிங்கம் பெண்கள் பள்ளியில் விளையாட்டு விழா
ADDED : டிச 10, 2025 07:53 AM
கோவை: அவினாசிலிங்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், விளையாட்டு விழா தலைமையாசிரியை நளினி தலைமையில் நடந்தது. இதில், 100 மீ., நீளம் தாண்டுதல் உள்ளிட்ட போட்டிகளில், 1,430 மாணவியர் பங்கேற்றனர். பள்ளி செயலாளர் கவுரி தேசிய கொடியேற்றி, மாணவியரின் அணிவகுப்பை ஏற்றுக்கொண்டார்.
மாணவியருக்கான, 600 மீ., ஓட்டத்தில் ஹரிப்பிரியா, தஸ்னீம், நந்தினி ஆகியோர் முதல் மூன்று இடங்களை வென்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு, ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனாட்சி பரிசுகள் வழங்கினார்.
மாநில அளவில் முதலிடம் பிடித்த, 12ம் வகுப்பு மாணவியரான தேவிகா, பூர்ணகலா ஆகியோருக்கு சிறந்த வீராங்கனை என்ற பரிசு வழங்கப்பட்டது. உடற்கல்வி ஆசிரியை வேல்மதி, ஆசிரியை வீரமாதேவி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.