/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வெள்ளலுாரில் தெருநாய் காப்பகம் கிணத்துக்கடவு எம்.எல்.ஏ. எதிர்ப்பு
/
வெள்ளலுாரில் தெருநாய் காப்பகம் கிணத்துக்கடவு எம்.எல்.ஏ. எதிர்ப்பு
வெள்ளலுாரில் தெருநாய் காப்பகம் கிணத்துக்கடவு எம்.எல்.ஏ. எதிர்ப்பு
வெள்ளலுாரில் தெருநாய் காப்பகம் கிணத்துக்கடவு எம்.எல்.ஏ. எதிர்ப்பு
ADDED : டிச 10, 2025 07:54 AM
கோவை: வெள்ளலுார் குப்பை கிடங்கு வளாகத்தில் தெருநாய் காப்பகம் கட்டுவதற்கு, கிணத்துக்கடவு எம்.எல்.ஏ., தாமோதரன் ஆட்சேபம் தெரிவித்துள்ளார்.
கோவை நகர் பகுதியில் சேகரமாகும் குப்பையை, வெள்ளலுார் கிடங்கில் கொட்டுவதால், சுற்றுவட்டாரத்தில் சுகாதாரப் பிரச்னை இருக்கிறது. இவ்வளாகத்தில் தெருநாய் கருத்தடை சிகிச்சை மையம், நான்கு கூண்டுகள் கட்டப்பட்டு உள்ளன. கூடுதலாக நான்கு அறுவை சிகிச்சை மையங்கள் மற்றும் டாக்டர்கள் அறைகள் கட்டுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இச்சூழலில், அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள், ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்ட்டுகள் உள்ளிட்ட பொதுமக்கள் கூடுமிடங்களில் சுற்றும் தெருநாய்களை பிடித்தால், அவற்றை பராமரிக்க, பாதுகாப்பகம் கட்டுவதற்கு, மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
முதல்கட்டமாக, வெள்ளலுார் கிடங்கு வளாகத்தில் கட்டுவதற்கு ஆலோசிக்கப்பட்டுள்ளது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கிணத்துக்கடவு எம்.எல்.ஏ., தாமோதரன், கிடங்கு வளாகத்தை சுற்றிப் பார்த்து, சுற்றுப்பகுதி மக்களுக்கு ஏற்படும் பிரச்னைகளை கேட்டறிந்தார்.
'இவர், கலெக்டருக்கு அனுப்பிய கடிதத்தில், 'வெள்ளலுார் கிடங்கில் இருந்து வரும் துர்நாற்றத்தால், 10 கி.மீ., துாரத்துக்கு பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். ஆழ்துளை கிணற்று நீர் மஞ்சள் நிறமாக மாறியிருக்கிறது.
'தெருநாய் சிகிச்சை மையம், பாதுகாப்பகம் கட்டுவது மேலும் சிரமப்படுத்தும். இப்பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும்' என கூறியுள்ளார்.

