/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாமன்ற பேச்சின் வீடியோ கேட்கின்றனர் கவுன்சிலர்கள்
/
மாமன்ற பேச்சின் வீடியோ கேட்கின்றனர் கவுன்சிலர்கள்
மாமன்ற பேச்சின் வீடியோ கேட்கின்றனர் கவுன்சிலர்கள்
மாமன்ற பேச்சின் வீடியோ கேட்கின்றனர் கவுன்சிலர்கள்
ADDED : டிச 10, 2025 07:54 AM
கோவை: மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் வார்டு பிரச்னைகளுக்காக குரல் கொடுக்கும் 'வீடியோ' பதிவை வழங்குமாறு, கவுன்சிலர்கள் மாநகராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளனர்.
மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மாதம் தோறும் மாமன்ற சாதாரண கூட்டம் நடக்கிறது. மேயர், கமிஷனர் அல்லது துறை சார்ந்த அலுவலர்கள், கவுன்சிலர்களின் கேள்விகளுக்கு உடனுக்குடன் பதில் அளிக்கின்றனர்.
சில தேவைகள் நிறைவேறாத பட்சத்தில், 'கவுன்சிலர்கள் உண்மையில் குரல் கொடுத்தார்களா' என்ற சந்தேகம் மக்களுக்கு ஏற்படுகிறது. இச்சூழலில், மன்ற கூட்டத்தில் பேசப்படும் கருத்தை 'வீடியோ' பதிவாக வழங்குமாறு, கவுன்சிலர்கள் முறையிட்டுள்ளனர்.
இது குறித்து, ம.தி.மு.க., மாமன்ற குழு தலைவர் சித்ரா, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரனிடம் அளித்த மனுவில், 'மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசும் பேச்சை, வீடியோ பதிவாக வழங்க வேண்டும். இதை காணும் மக்களுக்கு, நாங்கள் கடமையை செய்வது புரியும். பார்லிமென்ட், சட்ட சபைகளில் மக்கள் பிரதிநிதிகளின் பேச்சு, உடனடியாக வழங்கப்படுகிறது.
அதே போல், மாநகராட்சி நிர்வாகமும் வழங்க வேண்டும். பேச்சுக்குறிப்பையும் வழங்க வேண்டும்' என தெரிவித்துள்ளார்.

