/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு கல்லூரியில் விளையாட்டு விழா
/
அரசு கல்லூரியில் விளையாட்டு விழா
ADDED : மார் 29, 2025 11:46 PM
தொண்டாமுத்தூர்: தொண்டாமுத்தூர் அரசு கலை அறிவியல் கல்லூரியில், விளையாட்டு விழா நடந்தது. இதில், கல்லூரியில் உள்ள ஆறு துறைகளுக்கிடையான, கபடி, கோகோ, வாலிபால், குண்டு எறிதல், தடகள போட்டிகள் ஆகிய விளையாட்டு போட்டிகள் நடந்தன.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, பரிசு வழங்கும் விழா நேற்று நடந்தது. கல்லூரி முதல்வர் சக்தி ஸ்ரீ தலைமை வகித்தார். பாரதியார் பல்கலை., உடற்கல்வித்துறை உதவி பேராசிரியர் வள்ளி முருகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். அனைத்து போட்டிகளிலும் சிறந்து விளங்கிய, வணிகவியல் (சி.ஏ.,) மாணவர் ஜோஸ்வா, கணிதவியல் மாணவி கனகவேஸ்வரி மற்றும் வணிகவியல் (பி.ஏ.,) மாணவர் முகமது ஆசிக் ஆகியோருக்கு, சிறந்த வீரர்களுக்கான பரிசு வழங்கப்பட்டது. ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் கோப்பையை, அதிக புள்ளிகள் பெற்ற வணிகவியல் (பி.ஏ.,) துறை மாணவர்கள் தட்டி சென்றனர்.