/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மான்செஸ்டர் பள்ளியில் விளையாட்டு விழா
/
மான்செஸ்டர் பள்ளியில் விளையாட்டு விழா
ADDED : ஜன 26, 2024 01:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை;மான்செஸ்டர் இன்டர்நேஷனல் பள்ளியின் ஆண்டு விளையாட்டு விழா, பள்ளி வளாகத்தில் நடந்தது.'வூசூ' தமிழ்நாடு தலைவர் அலெக்ஸ் அப்பாவு பேசுகையில்,''வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சவால்களில் வெற்றி பெற, பள்ளி கால விளையாட்டுகள் முக்கிய பங்காற்றுகின்றன,'' என்றார்.
யோகா, கராத்தே உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு, பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. பள்ளி தலைவர் மூர்த்தி, தாளாளர் பிரியா மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர் பங்கேற்றனர்.

