/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நவ பாரத் சர்வதேச பள்ளியில் விளையாட்டு விழா
/
நவ பாரத் சர்வதேச பள்ளியில் விளையாட்டு விழா
ADDED : ஆக 13, 2025 08:58 PM

அன்னுார்; அன்னுார் நவபாரத் சர்வதேச பள்ளியில் விளையாட்டு விழா நடந்தது.
அன்னுார், நவபாரத் சர்வதேச பள்ளியில், 13ம் ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது. தேசியக்கொடி மற்றும் ஒலிம்பிக் கொடி ஏற்றப்பட்டது. பள்ளி கொடியை இந்திய மருத்துவர் சங்க நிர்வாகி டாக்டர் சதீஷ் பாபு ஏற்றினார்.
பள்ளி முதல்வர் பூங்கொடி வரவேற்றார். மாணவ, மாணவியரின் அணிவகுப்பு நடந்தது. தடகளம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. எவரெஸ்ட் அணி ஒட்டுமொத்தமாக அதிக புள்ளிகள் பெற்று முதலிடம் பெற்றது. ஆல்ப்ஸ் அணி, அலாஸ்கா அணி, ஒலிம்பஸ் அணி ஆகியவை முறையே இரண்டு, மூன்று மற்றும் நான்காம் இடங்களை பிடித்தன.
வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு, பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் பள்ளி நிர்வாகிகள் ரகுராமன், நந்தகுமார், சண்முகசுந்தரம், சுவாமிநாதன், செல்வராஜ், வெங்கடாசலம், செந்தில், டாக்டர்கள் தங்கவேல், குமரேசன் ஆகியோர் பங்கேற்றனர். பள்ளி செயலர் நித்தியானந்தன் நன்றி தெரிவித்தார்.