/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
என்.ஜி.எம்., கல்லுாரியில் விளையாட்டு விழா
/
என்.ஜி.எம்., கல்லுாரியில் விளையாட்டு விழா
ADDED : ஏப் 14, 2025 10:01 PM

பொள்ளாச்சி,; பொள்ளாச்சி என்.ஜி.எம்., கல்லுாரியில் விளையாட்டு விழா நடந்தது. கல்லுாரி முதல்வர் மாணிக்கச் செழியன், தேசியக்கொடியேற்றி விழாவை துவக்கி வைத்தார். கல்லுாரி மேலாளர் ரகுநாதன் கல்லுாரி கொடியையும், கல்வி இயக்குனர் சரவணபாபு விளையாட்டுத்துறையின் கொடியையும் ஏற்றி வைத்தனர். கல்லுாரி டீன் முனைவர் உமாபதி, முனைவர் முத்துக்குமரன் பங்கேற்றனர்.
விளையாட்டு வீராங்கனைகளின் அணிவகுப்பு நடந்தது. விளையாட்டு துறை தலைவர் அசோக்குமார் ஆண்டறிக்கை படித்தார். மாணவ, மாணவியருக்கான தொடர் ஓட்டம் நடந்தது. சிலம்பம், நடனம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் மாணவர்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். ஆசிரியர்களுக்கும் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.
தென்மாநில அளவிலான பல்கலைகளுக்கு இடையேயான விளையாட்டு போட்டியில் பங்கேற்ற கல்லுாரி மாணவர்கள் கபடி போட்டியில், ராகமிதா, ப்ளோராஜென்ஸி; கையுந்து போட்டியில், வர்ஷினி, ப்ரஜீஷா, சஞ்ஜித், தியாவர்கீஷ் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
அகில இந்திய பல்கலைகளுக்கு இடையேயான விளையாட்டு போட்டியில் பங்கேற்ற மாணவர்கள் பிரவின் (நீளம் தாண்டுதல்), அரவிந்த் (110 மீ., தடை தாண்டுதல்) ஆகியோருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. கல்லுாரி மாணவர் விக்னேஷ்குமார் நன்றி கூறினார்.