/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பி.ஜி.வி., பள்ளியில் விளையாட்டு விழா
/
பி.ஜி.வி., பள்ளியில் விளையாட்டு விழா
ADDED : நவ 02, 2025 11:16 PM

பெ.நா.பாளையம்: துடியலூர் அருகே வரப்பாளையத்தில் உள்ள பி.ஜி.வி., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு விழா நடந்தது.
இப்பள்ளியில், 21ம் ஆண்டு விளையாட்டு விழா நடந்தது. நிகழ்ச்சியை பள்ளியின் தாளாளர் டாக்டர் முத்துலட்சுமி துவக்கி வைத்தார்.
சுப்பிரமணியன் ஆசான் சிலம்பு கூடம் நிறுவனர் வெண்மதி பங்கேற்று, வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகளை வழங்கினார். இந்த ஆண்டுக்கான சிறந்த விளையாட்டு வீரர் விருதை இறுதியாண்டு படிக்கும் ஹரிணி மற்றும் சூர்யா ஆகியோர் பெற்றனர். அதிக புள்ளிகள் பெற்று சாம்பியன்ஷிப் கோப்பையை ட்ரூபர்ஸ் அணி வென்றது.
மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. நிகழ்ச்சி ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர்கள் கண்ணன், மற்றும் ரஞ்சனி ஆகியோர் செய்து இருந்தனர்.

