ADDED : ஆக 18, 2025 09:24 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டுப்பாளையம்; சிறுமுகையில் ஸ்ரீ அம்பாள் பப்ளிக் பள்ளியில் விளையாட்டு விழா நடந்தது. பள்ளி தாளாளர் பழனிசாமி, செயலாளர் கீதா, இயக்குனர் பிரதிக் ஷா ஆகியோர் தலைமை தாங்கினர். பள்ளியின் முதல்வர்கள் திருமூர்த்தி, ஏஞ்சலின் முன்னிலை வகித்தனர்.
இந்திய கப்பற்படை ஓய்வு பெற்ற அதிகாரி நபிகான் பேசுகையில், ''வெற்றியை விட பங் கேற்பு மிக முக்கியம். மாணவர்கள் ஒழுக்க நெறியை பின்பற்றி வாழ்வில் முன்னேற வேண்டும்,'' என்றார். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப் பட்டன.

