நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா மாருதி உடற்கல்வியியல் கல்லூரி மைதானத்தில் இன்று ராமகிருஷ்ண பரமஹம்சரின் நூற்றாண்டு நிறைவு நினைவு விளையாட்டு விழா நடக்கிறது.
இதில், 9 அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர் கலந்து கொள்கிறார்கள். அவர்களுக்கு கூட்டுப் பயிற்சிகள் வழங்கப்பட்டு, எவ்வித ஒத்திகையும் இல்லாமல், இன்று மாலை, 3.00 மணிக்கு கூட்டுப் பயிற்சியில் ஈடுபடுகின்றனர். நிகழ்ச்சியில், ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா செயலாளர் சுவாமி கரிஷ்டானந்தர், இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.