/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
துவக்க, நடுநிலை பள்ளிகளில் 'ஸ்பாட் அட்மிஷன்' தீவிரம்
/
துவக்க, நடுநிலை பள்ளிகளில் 'ஸ்பாட் அட்மிஷன்' தீவிரம்
துவக்க, நடுநிலை பள்ளிகளில் 'ஸ்பாட் அட்மிஷன்' தீவிரம்
துவக்க, நடுநிலை பள்ளிகளில் 'ஸ்பாட் அட்மிஷன்' தீவிரம்
ADDED : மே 14, 2025 11:39 PM
பொள்ளாச்சி; அரசு பள்ளிகளில், மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க, மேல்நிலை மற்றும் உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்கள், 'ஸ்பாட் அட்மிஷன்' பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், ஊராட்சி ஒன்றிய துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளி, நகராட்சிப்பள்ளி, அரசு நடுநிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கச் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அவ்வகையில், பள்ளி அமைந்துள்ள குடியிருப்பு பகுதிகளில், 5 வயதுடைய குழந்தைகள் ஏற்கனவே கண்டறியப்பட்ட நிலையில், அவர்களையும் பள்ளியில் சேர்ப்பதை ஆசிரியர்கள் உறுதி செய்கின்றனர். தற்போது, அனைத்து வகுப்புகளுக்கு தேர்ச்சி விபரம் வெளியிடப்பட்டுள்ளதால், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள், அருகே உள்ள தொடக்கப் பள்ளிகளுக்கு நேரடியாகச் சென்று, 'ஸ்பாட் அட்மிஷன்' செய்தும் வருகின்றனர்.
பள்ளித் தலைமையாசிரியர்கள் கூறியதாவது:
ஆண்டுதோறும் அரசு பள்ளிகளில், மாணவர்களின் சேர்க்கையை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தற்போது, துவக்கப் பள்ளிகளில் மாணவர் தேர்ச்சி விபரம் வெளியிடப்பட்டுள்ளது.
அங்கு, 5 மற்றும் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களை, அருகில் உள்ள உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டள்ளது. மூன்று முதல் நான்கு ஆசிரியர்கள், துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு நேரடியாகச் சென்று 'ஸ்பாட் அட்மிஷன்' செய்தும் வருகின்றனர்.
மாணவர்களின் பெற்றோர்களிடம் அரசு சார்பில் அளிக்கப்படும் சலுகைகள், பள்ளியின் சிறப்பான செயல்பாடுகள் குறித்து விளக்கப்படுகிறது.
இவ்வாறு, கூறினர்.