/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
எஸ்டேட்டில் திடீர் மின் கசிவால் மருந்து தெளிப்பான் அறை சேதம்
/
எஸ்டேட்டில் திடீர் மின் கசிவால் மருந்து தெளிப்பான் அறை சேதம்
எஸ்டேட்டில் திடீர் மின் கசிவால் மருந்து தெளிப்பான் அறை சேதம்
எஸ்டேட்டில் திடீர் மின் கசிவால் மருந்து தெளிப்பான் அறை சேதம்
ADDED : ஆக 05, 2025 11:29 PM

வால்பாறை; வால்பாறை அருகே எஸ்டேட்டில், திடீர் மின் கசிவினால் மருந்து தெளிப்பான் அறை தீப்பற்றி சேதமானது.
கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுலா தலமாக உள்ளது. இப்பகுதியில் தேயிலை எஸ்டேட்டுகள் அதிகளவில் அமைந்துள்ளன.
வால்பாறை அருகே உள்ள வாட்டர்பால்ஸ் எஸ்டேட்டில் நேற்று மாலை திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. வாட்டர்பால்ஸ் எஸ்டேட் முதல் பிரிவுக்கு சொந்தமான மருந்து தெளிப்பான் அறை உள்ளது. இந்த குடோனில், 50 ஸ்பிரேயர் மற்றும் மருந்துகள் வைக்கபட்டிருந்தன.
இந்நிலையில் நேற்று மாலை, 3:00 மணிக்கு மருந்து குடோன் திடீரென தீப்பற்றி எரிந்தது. சிறிது நேரத்தில் தீ மளமளவென எரிந்தது. இதுபற்றி எஸ்டேட் நிர்வாகத்தினர் உடனடியாக தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். வால்பாறை தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று,மருந்து குடோனில் பரவிய தீயை போராடி அணைத்தனர்.
இந்த சம்பவத்தில் குடோனில் இருந்த மருந்து மற்றும் ஓடுகளால் ஆன மேற்கூரை சேதமானது. மின் கசிவினால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.
தீ வீபத்தில் மருந்து பொருட்கள் மற்றும் உபகரணங்கள் சேதமாயின. சம்பவம் குறித்து காடம்பாறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.