/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'சிலிக்கான் லேப்ஸ்' உடன் ஸ்ரீ ஈஸ்வர் கல்லுாரி புரிந்துணர்வு
/
'சிலிக்கான் லேப்ஸ்' உடன் ஸ்ரீ ஈஸ்வர் கல்லுாரி புரிந்துணர்வு
'சிலிக்கான் லேப்ஸ்' உடன் ஸ்ரீ ஈஸ்வர் கல்லுாரி புரிந்துணர்வு
'சிலிக்கான் லேப்ஸ்' உடன் ஸ்ரீ ஈஸ்வர் கல்லுாரி புரிந்துணர்வு
ADDED : ஏப் 04, 2025 11:48 PM

கோவை; கிணத்துக்கடவு ஸ்ரீ ஈஸ்வர் பொறியியல் கல்லுாரி, சர்வதேச செமி கண்டக்டர் நிறுவனமான சிலிகான் லேப்ஸ் நிறுவனத்துடன், புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சியில் பேசிய, சிறப்பு விருந்தினர் வெங்கடேஷ், உலக அளவில் செமி கண்டக்டர் துறையில் தற்போது ஏற்பட்டு வரும் முன்னேற்றங்கள் பற்றியும், அதில் மாணவர்களுக்கு உள்ள பிரகாசமான வாய்ப்புக்கள் பற்றியும் குறிப்பிட்டார்.
புரிந்துணர்வு ஒப்பந்தம், செமி கண்டக்டர் துறையில் மாணவர்களுக்கு நல்ல திறனை வளர்த்துக்கொள்ளவும், பல திட்டங்களை மேற்கொண்டு, தங்கள் திறமைகளை வெளிப்படுத்த உதவும் என்று, கல்லுாரி முதல்வர் சுதா தெரிவித்தார்.
கல்லுாரி வளாகத்தில் சிலிகான் லேப்ஸ் நிறுவனத்தின் ஆய்வு கூடத்தை, அந்நிறுவனத்தின் மூத்த தொழில்நுட்ப இயக்குனர் வெங்கடேஷ் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.
கல்லுாரியின் தொழில்துறை நல்லுறவு டீன் கண்ணன் நரசிம்மன், பேராசிரியர்கள், மாணவர்கள் நிகழ்வில் பங்கேற்றனர்.