/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவை ‛இஸ்கான் கோயிலில் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி விழா
/
கோவை ‛இஸ்கான் கோயிலில் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி விழா
ADDED : ஆக 08, 2025 09:08 PM
கோவை; கோவை இஸ்கான் கோவிலில், 25வது ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி விழா, வரும் 16ம் தேதி கொண்டாடப்பட உள்ளது.
ஆண்டுதோறும் கிருஷ்ண ஜெயந்தி விழா, இக்கோவிலில் கோலாகலமாக கொண்டாடப்படும்.
நடப்பாண்டு வரும் 15ம் தேதி, ஸ்ரீ ராதாகிருஷ்ணர் கோவில் கோபுரத்தில், சுதர்சன சக்கரத்தின் பிரதிஷ்டை விழா நடக்கிறது. முதல் நிகழ்வாக, அன்று காலை 5:30 மணிக்கு, மஹா சுதர்சன ஹோமம் நடத்தப்படுகிறது.
ஒடிசா மாநிலம், பூரி நகரில் உள்ள பாரம்பரியமிக்க ஜெகன்னாதர் கோவிலின் பிரமாண்ட கோபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள சுதர்சன சக்கரத்தை பின்பற்றி, கோவை இஸ்கான் கோவிலில், சக்கரத்தாழ்வார் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளார்.
வரும் 16ம் தேதி ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி விழா நடக்கிறது. அதிகாலை சிறப்பு பூஜை, குழந்தைகளுக்கான கலை நிகழ்ச்சி, கீர்த்தனைகள், அபிஷேகம், கோலாட்டம், நாடகம், கலாசார நிகழ்ச்சிகள், ஆன்மிக கேள்வி - பதில் உட்பட பல நிகழ்ச்சிகள், தவத்திரு பக்தி வினோத சுவாமியின் தலைமையில் நடத்தப்படுகின்றன.
பக்தர்கள் தங்கள் குடும்பத்துடன் திரளாக பங்கேற்க வேண்டும் என, கோவில் நிர்வாகம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.