sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ்: இந்த தீபாவளிக்கு இதெல்லாம் தனித்துவமான வரவு

/

ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ்: இந்த தீபாவளிக்கு இதெல்லாம் தனித்துவமான வரவு

ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ்: இந்த தீபாவளிக்கு இதெல்லாம் தனித்துவமான வரவு

ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ்: இந்த தீபாவளிக்கு இதெல்லாம் தனித்துவமான வரவு


ADDED : அக் 10, 2025 12:33 AM

Google News

ADDED : அக் 10, 2025 12:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மை சூர்பா… பெயரைக் கேட்டதும் அதன் சுவை நாவூறி, நெய்யின் மணம் நாசியைத் துளைத்து, கண்களை மயக்கும் அந்த அனுபவம் விரிகிறது என்றால் நீங்கள் நிச்சயம் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸின் மைசூர்பாவை ருசித்திருக்கிறீர்கள் என்று அர்த்தம். அந்த அளவுக்கு மைசூர்பா-வின் உருக வைக்கும் சுவையை உலகெங்கும் கொண்டு சேர்த்திருக்கிறது ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ்.

இதுதொடர்பாக, ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் வைஷ்ணவி கிருஷ்ணனிடம் பேசினோம்.

வாடிக்கையாளர்களுக்கு ஏதாவது புதுமையாகத் தர வேண்டும் என்பதற்காக, இந்த தீபாவளிக்கு பரிசாக வழங்கும் வகையில் சில தனித்துவமான பரிசுப் பெட்டகங்களை (கிப்ட் பாக்ஸ்) அறிமுகம் செய்திருக்கிறோம்.

சத்வா பிரீமியம் பிரிவில் 'சத்வா' சிறப்பான ஒன்று. ஒவ்வொரு மைசூர்பாவையும் தனித்தனியாக, அதற்கான பிரத்யேகமான கருப்பொருளில் வடிவமைக்கப்பட்ட டின்களில் வைத்து பேக் செய்துள்ளோம். பால், வெண்ணெய், வெண்ணெயை உருக்குதல், நெய்யில் இருந்து இனிப்பு, இனிப்பை உண்ணல் என, 5 கருப்பொருள்களை மையமாக வைத்து, சுரபி, நவநீதா, அஹுதி, யோகவாஹி, ஓஜோ வர்தஹம் என 5 விதமாக வடிவமைத்துள்ளோம். இவற்றை விளக்கும் சிறு குறிப்புகளும் வைத்துள்ளோம். இன்ப அதிர்ச்சியாக 100 கிராம் நெய் இணைத்துள்ளோம்.

இப்பெட்டி, தேர்ந்த கைவினைக் கலைஞரைக் கொண்டு, கோரைப்பாயால் முடையப்பட்டதாகும்.லிமிட்டெட் எடிஷன் என்பதால் முன்கூட்டிய பதிவு அவசியம்.

ஸ்வீட் டிரேஜீஸ் இதுவும் புதிய அறிமுகம்தான் வழக்கமாக டிரேஜீஸ்கள், உலர் பழங்கள், கொட்டைகளில், சாக்லேட் கோட்டிங் செய்து தயாரிக்கப்படும். நாம் நமது பாரம்பரியத்தோடு இணைத்து, முதன் முறையாக ஸ்வீட் டிரேஜீஸ் உருவாக்கியுள்ளோம். திராமிசு, ரோஸ், சாகோவிட்டா என மூன்று பிரமாதமான சுவைகளில் காஜு ஸ்வீட் டிரேஜீஸ் வகையை இந்த தீபாவளிக்கு அறிமுகம் செய்துள்ளோம்.

இவை மட்டுமல்லாது, 51 வகையான ஸ்வீட்களில் தலா ஒன்று இடம்பெற்ற, 'மாதுர் 51', அரிஸ்டோகிராட், லெஜண்டரி போன்ற பிரத்யேகமான கிப்ட் பாக்ஸ்களும் உள்ளன. இவற்றை வாங்கவும் முன்பதிவு செய்ய வேண்டும்.

நமது ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸின் சில்வர், டைமண்டு உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட வகைகளில் கிப்ட் பாக்ஸ்கள் உண்டு. 250 கிராம், 500 கிராம், 1 கிலோ அளவுக்கான கிப்ட் வவுச்சர்களையும் பரிசளிக்கலாம். இதன் மதிப்புக்கு எந்த இனிப்பையும் வாங்கிக் கொள்ளலாம். அதுவும், வரும் 2026 ஜன., 31ம் தேதி வரை.






      Dinamalar
      Follow us