/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் தீபாவளி இனிப்புக்கு இருக்கு தனி ருசி
/
ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் தீபாவளி இனிப்புக்கு இருக்கு தனி ருசி
ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் தீபாவளி இனிப்புக்கு இருக்கு தனி ருசி
ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் தீபாவளி இனிப்புக்கு இருக்கு தனி ருசி
ADDED : அக் 24, 2024 10:05 PM

தீபாவளினு வந்துட்டா இனிப்புகளும் முக்கிய இடம் பிடிக்கின்றன. லட்டு, ரவா லட்டு, பாதுஷா, ஜிலேபி, மைசூர்பாகு, தேங்காய் பர்பி, அதிரசம், என, பாரம்பரிய இனிப்பு வகைகளை அம்மா செய்யும் போது அதில் கிடைக்கும் ருசியே தனிதான்.முள்ளு முறுக்கு, சீரக முறுக்கு, தேங்காய் பால் முறுக்கு இப்படி பல ஐயிட்டங்களை தயாரிக்கும் போதே நாவில் எச்சில் ஊறும்.
இன்று மெனக்கெட்டு இனிப்பு, காரங்களை தயார் செய்வது யாருக்கும் பிடிப்பதில்லை. நேரமும் இருப்பதில்லை. இந்தாண்டு ஸ்வீட் ஸ்டால்களில் பல்வேறு புதிய இனிப்புகள் வாடிக்கையாளர்களுக்காக கொண்டு வரப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்களின் தேவையை கருத்தில் கொண்டு கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் மதுர், 51, நட்சோ உள்ளிட்ட இனிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் இயக்குனர் வைஷ்ணவி கிருஷ்ணன் கூறியதாவது:
ஆண்டு தோறும் தீபாவளியை முன்னிட்டு, பாரம்பரிய இனிப்பு, கார வகைகளை தயாரித்து வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறோம். வாடிக்கையாளர்கள் திருப்தியை கருத்தில் கொண்டு இனிப்பு வகைகளை தயார் செய்கிறோம். இந்தாண்டு, ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில், மதுர், 51 என்ற புதிய இனிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதில், 51 வகையான இனிப்புகள் இடம்பெற்றிருக்கும். பல வகையான சோம்பப்படிகள், நெய் இனிப்புகள், பர்பிகள், கத்திலிகள், லட்டுகள், காஜு வகைகள் இருக்கும். குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் பிடித்த இனிப்புகள் இதில் இருக்கும்.
இந்தாண்டு 'நட்சோ' எனும் இனிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளோம். எலைட் மற்றும் பிரிமியம் என, இரு வகைகளில் இனிப்புகள் உள்ளன.
எலைட் வகை நண்பர்கள், உறவினர்களுக்கு பரிசளிக்கும் விதத்தில் பல்வேறு 'நட்ஸ்' இடம் பெற்றிருக்கும். சால்டட் நட்ஸ், மசாலா முந்திரி, சில்லி முந்திரி உள்ளிட்ட பல்வேறு வகை நட்ஸ்கள் இடம்பெற்றிருக்கும். இதேபோல், பிரிமியம் வகையும் உள்ளன. இத்துடன் எஸ்.கே., கிளாசிக் எனும், புதிய வகை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதில் எங்களது பிரத்யேக தயாரிப்புகளான மைசூர் பாகு மற்றும் பாதாம் அல்வா அதில் இருக்கும். இதுதவிர, பல்வேறு புதிய தயாரிப்புகள் உள்ளன. குழந்தைகளுக்காக பாதாம் அல்வா, காஜு கட்லி, பட்டர் ஸ்காட்ச் ஸ்கொயர், காஜு பிரவுனி, பாதாம் சாக்கோ நட்ஸ் உள்ளிட்ட பல்வேறு இனிப்புகள் உள்ளன.
இவ்வாறு, கூறினார்.