/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸின் இரு புதிய கிளைகள் திறப்பு
/
ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸின் இரு புதிய கிளைகள் திறப்பு
ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸின் இரு புதிய கிளைகள் திறப்பு
ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸின் இரு புதிய கிளைகள் திறப்பு
ADDED : மே 18, 2025 11:02 PM

கோவை ;ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸின், 67 மற்றும் 68வது கிளை திறப்பு விழா நேற்று நடந்தது.
கோவை மேட்டுப்பாளையம் ரோடு வெள்ளக்கிணறு பிரிவு அருகே, 68வது கிளை திறப்பு விழா நடந்தது. இதில், ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் இயக்குனர் ஹரிதா கிருஷ்ணன், முதன்மை செயலாக்க அலுவலர் துருவ், முதன்மை செயல் அலுவலர் வைத்தியநாதன் ஆகியோர் விற்பனையை துவக்கி வைத்தனர். முதல் விற்பனையை, ஆடிட்டர் பிரபு பெற்றுக் கொண்டார்.
புதிய கிளையில், 250க்கும் மேற்பட்ட இனிப்பு வகைகள், 100க்கும் மேற்பட்ட கார வகைகள் அணிவகுத்துள்ளன. இத்துடன், ரெடி மிக்ஸ் மசாலா பொருட்கள், ஊறுகாய் வகைகளும் இடம் பெற்றுள்ளன.
முன்னதாக, நேற்று காலை நடந்த மற்றொரு நிகழ்ச்சியில், மேட்டுப்பாளையம், கோவை ரோட்டில், 67வது கிளை துவக்க விழா நடந்தது. திறப்பு விழாவை முன்னிட்டு, இனிப்பு மற்றும் கார வகைகளுக்கு, 50 சதவீத தள்ளுபடி வழங்கப்பட்டது.