/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஸ்ரீ மகா கணபதி கோவில் அஷ்டபந்தன கும்பாபிஷேகம்
/
ஸ்ரீ மகா கணபதி கோவில் அஷ்டபந்தன கும்பாபிஷேகம்
ADDED : ஜூன் 08, 2025 10:45 PM

கோவை; உப்பிலிபாளையம் கோ ஆப்பரேட்டிவ் காலனியில் அமைந்துள்ள, ஸ்ரீ மகா கணபதி திருக்கோவிலில் பக்தர்கள் சூழ அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா, நேற்று விமரிசையாக நடந்தது.
அஷ்டபந்தன கும்பாபிஷேக விழா, கடந்த 7ம் தேதி காலை 8:00 மணிக்கு மங்கள இசையுடன் துவங்கியது. அனுக்ஞை, விக்னேஸ்வரபூஜை, கணபதிஹோமம், பூர்ணாஹூதி, வாஸ்துசாந்தி, காப்புகட்டுதல் அஷ்டபந்தன மருந்து சாத்தும் நிகழ்ச்சிகள் நடந்தன.
இரவு 8:00 மணிக்கு மங்கள இசை, பிம்பசுத்தி, ரக்ஷாபந்தனம், கும்பஅலங்காரம், யாகசாலை பிரவேசம், வேதிகா அர்ச்சனை, மூலமந்திர காயத்ரி ஹோமம் நடந்தது.
நேற்று காலை 4 மணிக்கு மங்களஇசையுடன் நிகழ்ச்சிகள் துவங்கி, மூலமந்திரஜப ஹோமங்கள், மஹாபூர்ணாஹூதியுடன் நிறைவடைந்தது.
காலை 7:30 மணிக்கு விமானம் மற்றும் ஸ்ரீ மகாகணபதி பரிவாரமூர்த்திகள் மஹாகும்பாபிஷே கம் , தசதரிசனம், அபிஷே கம் மஹாதீபாராதனை ஆகியவை நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
மஹா கும்பாபிஷே க விழா, சர்வசாதகர் ராஜலிங்கசிவாச்சாரியர், கிருபாகர சிவாச்சாரியர் ஆகியோர் தலைமையில் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.