/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஸ்ரீ நாட்டிய நிகேதன் ஆண்டு விழா
/
ஸ்ரீ நாட்டிய நிகேதன் ஆண்டு விழா
ADDED : நவ 24, 2025 06:24 AM

கோவை: கோவையில் ஸ்ரீ நாட்டிய நிகேதன் 25ம் ஆண்டு விழா, கடந்த ஐந்து நாட்களாக, நாட்டிய ரசிகர்களை கொண்டாட வைத்தது.
கடந்த 15, 16ம் தேதிகளில் ஆர்.எஸ்.புரம் மாருதி கான சபாவில், சென்னையை சேர்ந்த ஷோபனா பாலச்சந்தர், கேரளாவை சேர்ந்த ராஜ்ஸ்ரீ வாரியர் ஆகியோரின் நாட்டியம் நடந்தது. கடந்த 21, 22ம் தேதிகளில், நவ இந்தியா இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரியில், பவித்ரா கிருஷ்ணா பட், அஜீஸ் மேனன் ஆகியோரின் நாட்டிய நிகழ்ச்சி நடந்தது.
தவிர, குருவின் மாணவர்களிடம் பயின்ற மாணவர்கள் சார்பிலும் நாட்டியம் நடந்தது.
இறுதி நாளான நேற்று, பர்ஷ்வனாத் உபாத்யே, ஆதித்யா, ஸ்ருதி ஆகியோர் இணைந்த நடனமும், ரமா வைத்தியநாதன் நடனமும் பார்வையாளர்களை பரவப்படுத்தியது. ஸ்ரீ நாட்டிய நிகேதனை நடத்தி வரும் மிருதுளா ராய், இவரின் மகள்கள் ஸ்ரீநிதி ராய், ரக்ஷா ராய் ஆகியோர் இணைந்த திரிசக்தி நாட்டியம் கைத்தட்டலை அள்ளியது. மாணவர்களின் பரமசிவம் நாட்டியம் வியக்க வைத்தது.
பாடகர் ரோஹித் பட் உபூருக்கு, மிருத்ய சங்கீத நிபுணா பட்டம் வழங்கி கவுரவிக்கப்பட்டார்.
ஐந்து நாட்கள் நடத்தப்பட்ட நிகழ்ச்சி, நாட்டிய ரசிகர்களை கொண்டாட வைத்தது.

