/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மண்ணியல் சங்க மாநாடு நிறைவு விழா
/
மண்ணியல் சங்க மாநாடு நிறைவு விழா
ADDED : நவ 24, 2025 06:24 AM
கோவை: இந்திய மண்ணியல் சங்கத்தின் 89வது ஆண்டு மாநாட்டின் நிறைவு விழா, தமிழ்நாடு வேளாண் பல்கலையில் நடந்தது.
தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தின், இந்திய மண்ணியல் சங்க கோவை பிரிவு, டில்லி, மண்ணியல் மற்றும் வேளாண் வேதியியல் துறை மற்றும் இந்திய மண்ணியல் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில், இந்திய மண்ணியல் சங்கத்தின் செயலாளர் ரஞ்சன் பட்டாச்சார்யா வரவேற்றார்.
கோவை பிரிவு தலைவர் செல்வி தலைமை வகித்தார். மேற்கு வங்க பிதான் சந்திரா க்ரிஷி விஷ்வ வித்யாலயா பல்கலைக் கழக துணைவேந்தர் பத்ரா பேசுகையில், ''வாழ்க்கை முறைகள் கரிமப் பொருட்களை சார்ந்துள்ளது. இன்றைய தீவிர விவசாய முறைகள் நீண்டகால நிலைத்தன்மையை நோக்கி மறுசீரமைக்கப்பட வேண்டும்,'' என்றார்.
மண் மற்றும் பயிர் மேலாண்மை ஆய்வுகள் முன்னாள் இயக்குனர் முருகப்பன், இயற்கை வள மேலாண்மை இயக்குனர் பாலசுப்ரமணியம், கல்வியாளர் கிருஷ்ணராஜ் வாணவராயர், வேளாண் பல்கலைக்கழக ஆராய்ச்சி இயக்குனர் ரவீந்திரன் உட்பட பலர் பேசினர்.
நிலையான மண் மேலாண்மை மற்றும் காலநிலை மீள்தன்மை குறித்து தேசிய கவனம் அதிகரித்து வருவது, ஊட்டச்சத்து பயன்பாட்டு திறனை மேம்படுத்துவதன் முக்கியத்துவம், மூன்றாம் தலைமுறை உரங்கள், நீரில் கரையக்கூடிய உரங்கள், நானோ உரங்கள் மற்றும் உயிர் உரங்கள் போன்ற அடுத்த தலைமுறை உள்ளீடுகள் ஆகியவை குறித்து விளக்கப்பட்டது.
மண்ணியல் துறையில் விஞ்ஞானிகளின் பங்களிப்புகளை அங்கீகரித்து விருது வழங்கப்பட்டது. இந்திய மண்ணியல் சங்க இணை செயலாளர் மனோஜ் ஸ்ரீவஸ்தவா நன்றி கூறினார்.

