/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஸ்ரீ ராமசந்திர மூர்த்தியின் 'திரு நாமம்' வலிமையானது
/
ஸ்ரீ ராமசந்திர மூர்த்தியின் 'திரு நாமம்' வலிமையானது
ஸ்ரீ ராமசந்திர மூர்த்தியின் 'திரு நாமம்' வலிமையானது
ஸ்ரீ ராமசந்திர மூர்த்தியின் 'திரு நாமம்' வலிமையானது
ADDED : ஜன 22, 2024 12:17 AM
சென்னை உயர்நீதி மன்றத்தில், மத்திய அரசின் சீனியர் ஸ்டாண்டிங் கவுன்சில் வழக்கறிஞர் பி.ஆர். ரமேஷ்பாபு கூறியதாவது:
அயோத்தியில் ஸ்ரீ ராமசந்திர மூர்த்திக்கு மஹோன்னதமான ஆலயம் எழுப்பப்பட்டு இன்று 22.01.2024 நாம் வாழ்கின்ற காலத்தில் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது என்பது நாம் செய்த பெரும் புண்ணியம் ஆகும்.
ஸ்ரீராமபிரான் எல்லா உயிருக்கும் வினைகளை அறுத்து பாவ விமோசனம் தர கூடிய தெய்வம். கவுதம முனிவரின் பதி விரதை அகல்யா, தான் செய்த பாவத்திற்கு ஸ்ரீ ராம பிரானின் பாதம் பட்டு பாவ விமோசனம் கிடைத்ததை நாம் அனைவரும் அறிவோம்.
நம்மை இரட்சிக்க/பாவ விமோசனம் வழங்க ஸ்ரீ ராம பிரான் நேரில் வர வேண்டிய அவசியம் இல்லை. ஸ்ரீ ராம சந்திர மூர்த்தியின் “திரு நாமம் நம்மை காக்கும் நாமியை விட நாமம் வலிமையானது.
அயோத்தி கும்பாபிஷேக நன்னாளில் நம் இல்லங்களில் விளக்கேற்றி ஸ்ரீ ராம நாமம் ஜெபிப்போம். இந்த தேசம் எல்லா வளங்களையும் பெற்று உலகில் ஜெகத் குருவாக விளங்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.