தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ சாதனை மாணவர்களுக்கு ஸ்ரீ ராமகிருஷ்ணா கவுரவம்

 சாதனை மாணவர்களுக்கு ஸ்ரீ ராமகிருஷ்ணா கவுரவம்

 சாதனை மாணவர்களுக்கு ஸ்ரீ ராமகிருஷ்ணா கவுரவம்


ADDED : டிச 16, 2025 05:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 16, 2025 05:12 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை: நவ இந்தியா,ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், சாதனை மாணவர்களுக்கு பாராட்டு விழா நேற்று நடந்தது. முதல்வர் மற்றும் செயலர் சிவக்குமார் தலைமை வகித்தார்.

அமெரிக்க குளோபல் சுற்றுச்சூழல் பல்கலை கவுரவ டாக்டர் பட்டம் பெற்ற, எஸ்.என்.ஆர்.சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் சுந்தருக்கு, மலர் மாலை அணிவித்தும், மலர்க்கொத்து வழங்கியும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

சென்னை தொழில்நுட்ப நிறுவனத்தில் நடைபெற்ற, தேசிய அளவிலான 'ஸ்மார்ட் இந்தியா 2025' ஹேக்கத்தான் போட்டியின் வன்பொருள் பிரிவில், முதல் பரிசு பெற்ற ஆறு மாணவர்களுக்கு மடிக்கணினி மற்றும் 'மந்திரி' என்ற திரைப்படத்தை தயாரித்து நடித்த மாணவர்களுக்கு, கல்லூரி சார்பாக ரூ.ஒரு லட்சம் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.

எஸ்.என்.ஆர்., சன்ஸ் அறக்கட்டளை தலைமை நிர்வாக அதிகாரி மகேஷ்குமார், பேராசிரியர்கள்,பெற்றோர்,மாணவர்கள்பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us