/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
முன்னணி நிறுவனங்களுடன் ஸ்ரீராமகிருஷ்ணா புரிந்துணர்வு
/
முன்னணி நிறுவனங்களுடன் ஸ்ரீராமகிருஷ்ணா புரிந்துணர்வு
முன்னணி நிறுவனங்களுடன் ஸ்ரீராமகிருஷ்ணா புரிந்துணர்வு
முன்னணி நிறுவனங்களுடன் ஸ்ரீராமகிருஷ்ணா புரிந்துணர்வு
ADDED : மே 31, 2025 04:30 AM

கோவை; அடுத்த தலைமுறை தொழில்துறைக்கு ஏற்ற மாணவர்களை உருவாக்கும் நோக்கில், முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களுடன், ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லுாரி புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
ஐ.சி.டி., அகாடமியுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட நிகழ்வில், மைக்ரோசாப்ட், ஆரக்கிள் அகாடமி, சேல்ஸ்போர்ஸ், ஆட்டோடெஸ்க், உள்ளிட்ட 12 உலகளாவிய தொழில்நுட்பத் தலைவர்களுடன், புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
ஐ.சி.டி., அகாடமி தலைமை நிர்வாக அதிகாரி ஸ்ரீகாந்த் பேசுகையில், ''கல்வி-த்தொழில் இடைவெளியைக் குறைப்பதன் வாயிலாக, மாணவர்களுக்கு இன்டர்ன்ஷிப்கள், நேரடி திட்டங்கள் மற்றும் கார்ப்பரேட்டை அறிந்துகொள்ள வாய்ப்பு வழங்கப்படும். நிஜ உலக கற்றல், தொழில்நுட்ப திறன்களை பெறுவதன் வாயிலாக, அடுத்த தலைமுறை தொழில்துறைக்கு மாணவர்கள் தயாராவார்கள்,'' என்றார்.
எஸ்.என்.எஸ்., சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் சுந்தர், கல்லுாரி முதல்வர் சவுந்தர்ராஜன்,ஐ.சி.டி., அகாடமியின் கல்விச் செயல்பாடுகளின் துணைத் தலைவர் சரவணன் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைவர்கள் பங்கேற்றனர்.