தரமான தொழிற்கல்வி அளிக்கும் ஸ்ரீராமகிருஷ்ணா பாலிடெக்னிக்
தரமான தொழிற்கல்வி அளிக்கும் ஸ்ரீராமகிருஷ்ணா பாலிடெக்னிக்
ADDED : மே 21, 2026 09:19 AM

கோவை: எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் கீழ் செயல்படும் ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி, ஏ.ஐ.சி.டி.இ., அங்கீகாரத்துடன் தரமான தொழிற்கல்வி வழங்கி வருகிறது.
இங்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகளும், பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கையும் வழங்கப்படுகிறது.
மெக்கானிக்கல், ஆட்டோமொபைல், சிவில், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன், கம்ப்யூட்டர் மற்றும் கம்யூனிகேஷன் அண்ட் நெட்வொர்க்கிங் இன்ஜினியரிங் உள்ளிட்ட 7 துறைகள் செயல்பட்டு வருகின்றன. நவீன ஆய்வகங்கள், ஸ்மார்ட் வகுப்பறைகள், விடுதி, பேருந்து மற்றும் விளையாட்டு வசதிகள் உள்ளன.
எல் அண்ட் டி, ராயல் என்பீல்டு, அல்ஸ்டோம் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. மத்திய, மா நில அரசுகளின் கல்வி உதவித்தொகைகளும் வழங்கப்படுகின்றன. ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி, இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி, கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உயர்கல்வி தொடர முன்னுரிமை அடிப்படையில் சேர்க்கை வழங்கப்படுகிறது.
