/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பள்ளிகளுக்கு இடையேயான கிரிக்கெட் ஸ்ரீ ராமகிருஷ்ணா பள்ளி அணி சாம்பியன்

ADDED : மார் 18, 2025 05:25 AM
கோவை : கோவை மாவட்ட பள்ளிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் பள்ளி அணி முதலிடம் பிடித்தது.
கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், பள்ளிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி, பி.எஸ்.ஜி., ஐ.எம்.எஸ். மைதானத்தில் எட்டு நாட்கள் நடந்தது. 14 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்களுக்கான இப்போட்டியில், 14 அணிகள் விளையாடின.
பல்வேறு சுற்றுகளை அடுத்து நடந்த இறுதிப்போட்டியில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி அணியும், சி.எஸ்.அகாடமி அணியும் மோதின. முதலில் பேட்டிங் செய்த ராமகிருஷ்ணா அணி, 25 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுக்கு, 130 ரன்கள் எடுத்தது.
அதிகபட்சம், வீரர் பிரகுல், 54 ரன்களுடனும், வீரர் மோனிஷ், 34 ரன்களுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். அடுத்து விளையாடிய, சி.எஸ். அகாடமி அணி, 15.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 40 ரன்கள் எடுத்தது. ஸ்ரீ ராமகிருஷ்ணா அணி, 90 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.