/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
புறப்பட்டார் ஸ்ரீ சச்சிதானந்த தீர்த்த சுவாமிகள்
/
புறப்பட்டார் ஸ்ரீ சச்சிதானந்த தீர்த்த சுவாமிகள்
ADDED : செப் 08, 2025 11:05 PM

கோவை; கோவையில் சாதுர்மாஸ்ய பூஜை மற்றும் விரதத்தை நிறைவு செய்த, ஸ்ரீ சக்கர மகாமேரு பீடம் ஸ்ரீசச்சிதானந்த தீர்த்த மகா சுவாமிகள், சட்டீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் உள்ள மடத்துக்கு, நேற்று புறப்பட்டு சென்றார்.
கோவை ராம் நகர் கோதண்ட ராமர் சுவாமி கோயில் தேவஸ்தானத்தில், சுவாமிகள் ஆக.10 முதல் நேற்று வரை சாதுர்மாஸ்ய பூஜை மற்றும் விரதங்களை துவக்கி, தொடர்ந்து நடத்தி வந்தார்.
தினமும் காலை, மாலை சந்திரமவுலீஸ்வரர் பூஜையை நிறைவேற்றினார். பக்தி சொற்பொழிவுகள், இசை நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகள் நடந்தன. பக்தர்களுக்கு அருளாசி, பிரசாதம் வழங்கி வந்தார்.
நிறைவு நாளான நேற்று சுவாமிகள், கோதண்டராம சுவாமி கோயில் நிர்வாகிகள், ஊழியர்களுக்கு மடத்தின் சார்பில் பரிசு, வழங்கி கவுரவித்தார். கோயில் நிர்வாகத்தினரும், பக்தர்களும் சுவாமிகளை நேற்று காலை வழியனுப்பி வைத்தனர்.