/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரேஸ்கோர்ஸ் ஸ்ரீ சத்ய சாய் மந்திரில்ஸ்ரீ சாய் காயத்ரிதேவி பிரதிஷ்டை
/
ரேஸ்கோர்ஸ் ஸ்ரீ சத்ய சாய் மந்திரில்ஸ்ரீ சாய் காயத்ரிதேவி பிரதிஷ்டை
ரேஸ்கோர்ஸ் ஸ்ரீ சத்ய சாய் மந்திரில்ஸ்ரீ சாய் காயத்ரிதேவி பிரதிஷ்டை
ரேஸ்கோர்ஸ் ஸ்ரீ சத்ய சாய் மந்திரில்ஸ்ரீ சாய் காயத்ரிதேவி பிரதிஷ்டை
ADDED : டிச 06, 2024 05:24 AM

கோவை: ரேஸ்கோர்ஸ் வெஸ்ட் கிளப் சாலையிலுள்ள ஸ்ரீ சத்ய சாய் மந்திரில் ஸ்ரீ சாய் விக்னேஸ்வரர் மற்றும் ஸ்ரீ சாய் காயத்ரிதேவி விக்ரஹங்கள் நேற்று பிரதிஷ்டை செய்யப்பட்டது.
ஸ்ரீ சத்யசாயி சேவா நிறுவனங்கள் தமிழ்நாடு தெற்கு - கோவை மாவட்டம் சார்பில் கோவை ரேஸ்கோர்ஸிலுள்ள ஸ்ரீ சத்யசாய் மந்திரில் பிரதிஷ்டை விழா நடந்தது.
இதற்காக சாய் மந்திர் வளாகத்தில், யாகசாலை அமைக்கப்பட்டிருந்தது. வேதவிற்பன்னர்கள், சிவாச்சாரியர்கள் சூழ வேதபாராயணங்கள் பாராயணம் செய்யப்பட்டது.
சங்கல்பம், வாஸ்துஹோமம், கணபதி ஹோமம், காயத்ரி, மஹாலட்சுமி மஹா சுதர்சன ஹோமங்களை தொடர்ந்து ஸ்ரீ சாய் விக்னேஸ்வரர் மற்றும் ஸ்ரீ சாய் காயத்ரிதேவி விக்ரஹங்களுக்கான பிரதிஷ்டா ஹோமங்கள் நடந்தது.
யாகசாலையில் வைக்கப்பட்டிருந்த புனித தீர்த்தங்கள் ஸ்ரீ சாய் விக்னேஸ்வரர் மற்றும் ஸ்ரீ சாய் காயத்ரிதேவி விக்ரஹங்கள் மீது தெளிக்கப்பட்டு பிரதிஷ்டா மந்திரங்களை வேதவிற்பன்னர்கள் பாராயணம் செய்தனர். மங்களஹாரத்தி, பிரசாத வினியோகத்தை தொடர்ந்து, வேதபாராயணமும், சாய்பஜனையும் நடந்தது. ஸ்ரீ சத்ய சாய் மந்திரில் ஸ்ரீ சாய் விக்னேஸ்வரருக்கும், ஸ்ரீ சாய் காயத்ரி தேவிக்கும் விசேஷ சிறப்பு பூஜைகள் நடந்தன.
தொடர்ந்து பகவான் ஸ்ரீ சத்யசாய்பாபாவுக்கு மங்களஹாரத்தி நடந்தது. திரளான சாய்பக்தர்களும் பொதுமக்களும் பங்கேற்றனர். பெங்களூரிலுள்ள ஸ்ரீ சத்யசாய் உயர் கல்வி நிறுவனங்களின் நிர்வாகி டாக்டர் ரவிக்குமாரின் சொற்பொழிவு நடந்தது. இரவு 7:30 மணிக்கு மங்கள ஹாரத்தியும் பிரசாத வினியோகமும் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.