/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஸ்ரீசாய் விக்னேஸ்வரர், காயத்ரிதேவி கோவையில் இன்று பிரதிஷ்டை விழா
/
ஸ்ரீசாய் விக்னேஸ்வரர், காயத்ரிதேவி கோவையில் இன்று பிரதிஷ்டை விழா
ஸ்ரீசாய் விக்னேஸ்வரர், காயத்ரிதேவி கோவையில் இன்று பிரதிஷ்டை விழா
ஸ்ரீசாய் விக்னேஸ்வரர், காயத்ரிதேவி கோவையில் இன்று பிரதிஷ்டை விழா
ADDED : டிச 04, 2024 11:00 PM
கோவை; கோவை மாவட்ட ஸ்ரீசத்யசாயி சேவா நிறுவனங்கள் மற்றும் சமிதிகள் சார்பில், ஸ்ரீசாய் விக்னேஸ்வரர் மற்றும் ஸ்ரீசாய் காயத்ரிதேவி பிரதிஷ்டை வைபவம், ரேஸ்கோர்ஸ் ஸ்ரீசாய் மந்திரில் இன்று (டிச., 5) காலை, 5:30 மணி முதல் நடக்கிறது.
கோவை, ரேஸ்கோர்ஸ் வெஸ்ட் கிளப் ரோட்டில் ஸ்ரீசாய் மந்திர் அமைந்திருக்கிறது. இங்கு, ஸ்ரீசாய் விக்னேஸ்வரர் மற்றும் ஸ்ரீசாய் காயத்ரிதேவி பிரதிஷ்டை வைபவம் இன்று (டிச., 5) காலை, 7:30 மணிக்கு சங்கல்பம், வாஸ்து, கணபதி, நவக்கிரஹ, காயத்ரி ஹோமங்களுடன் துவங்குகிறது. பூர்ண கும்பத்துடன் ஸ்வாமியை அழைத்து, பிரதிஷ்டை செய்யப்படுகிறது.
மாலை, 5:30 மணிக்கு வேதபாராயணம் மற்றும் பஜன் நடைபெறும். மாலை, 6:45 மணிக்கு ஸ்ரீசத்யசாய் நிறுவனங்களைச் சேர்ந்த ரவிக் குமாரின் சொற்பொழிவு நடக்கிறது. இரவு, 7:30 மணிக்கு மங்கள ஆரத்தி, பிரசாதம் வழங்கப்படும்.