/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஸ்ரீசத்யசாய்பாபா பிறந்த நாள் விழா
/
ஸ்ரீசத்யசாய்பாபா பிறந்த நாள் விழா
ADDED : நவ 25, 2024 10:42 PM

வால்பாறை; வால்பாறையில், ஸ்ரீசத்யசாய் பாபா பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
வால்பாறை கக்கன்காலனி சத்யசாய் சமிதி சார்பில், சத்யசாய் பாபாவின், 99வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி சிறப்பு அபிேஷக, அலங்கார பூஜை நடந்தது.
அதன் பின், சிறப்பு பஜன், கற்பூர ஆரத்தி, பிரசாதம் வழங்கல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. பக்தர்கள் பஜனை பாடல்களை பாடினர். தொடர்ந்து குழந்தைகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
விழாவுக்கான ஏற்பாடுகளை வால்பாறை சத்யசாய் சமிதியின் கன்வீனர் சண்முகவேல், ஒருங்கிணைப்பாளர் வக்கீல் முத்துசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்.
* பொள்ளாச்சி சத்யசாய் சேவா சமிதியில், சத்யசாய் பாபாவின், பிறந்த நாள் விழாவில், ஓம்காரம், சுப்ரபாதம், நகரசங்கீர்த்தனம், சாய்காயத்ரி மந்தர பாராயணம் நடந்தது. அதன்பின், சுயம்வர பார்வதி கலா ேஹாமம், சந்தான கோபால ேஹாமம் நடந்தது. மதியம், சிறப்பு நாராயண சேவையில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.