/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் தெய்வீக கண்காட்சி
/
ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் தெய்வீக கண்காட்சி
ADDED : நவ 13, 2025 11:56 PM
கோவை: ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் நுாறு ஆண்டு தெய்வீக அன்பை நினைவு கூரும் வகையில் நாளையும் நாளை மறுதினமும் (நவ., 15, 16) சாய்பாபா கோவிலுக்கு பின் பகுதியிலுள்ள சாய்தீப்ஹாலில் ஒரு பிரம்மாண்ட தெய்வீக கண்காட்சி நடக்கிறது.
'தெய்வீக அன்பின் செயல்பாட்டில் நுாறு ஆண்டுகள்' என்ற புனித மைல்கல்லின் ஒரு பகுதியாக இக்கண்காட்சி நடக்கிறது. பகவான் ஸ்ரீ சத்யசாய் பாபாவின் எல்லையற்ற அன்பு மற்றும் நிபந்தனையற்ற கருணையின் தெய்வீக மரபை மனிதகுலத்துக்கு நினைவூட்டுவதே இதன் நோக்கமாகும்.
இக்கண்காட்சி ஸ்ரீ சாயி சாசஷாத்காரம் அறக்கட்டளை, ஸ்ரீ சத்ய சாயி மாருதி சேவா அறக்கட்டளை மற்றும் ஸ்ரீ நாகசாயி அறக்கட்டளை ஆகியவற்றால் நடத்தப்படுகிறது.
இதில் பகவான் பாபாவின் வாழ்க்கையின் அரிய காட்சிகள், லீலைகள், பகவான் பாபாவின் சேவை திட்டங்களின் மல்டிமீடியா காட்சிகளாக இடம் பெறுகிறது. இதில் அனைவரும் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

