/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நுாறு சதவீத தேர்ச்சியுடன் சாதனை புரியும் ஸ்ரீ விநாயகா வித்யாலயா சி.பி.எஸ்.இ., பள்ளி

ADDED : செப் 27, 2025 01:03 AM
க ல்விச் சேவையை, 21 வருடங்களாக அளித்து வருகிறது ஸ்ரீ விநாயகா வித்யாலயா சி.பி.எஸ்.இ., பள்ளி. இப்பள்ளியின் செயல்பாடு குறித்து, தாளாளர் சோமசுந்தரம் கூறியதாவது:
காரமடை மேற்குப்பகுதியில், இயற்கை சூழலில் அனைத்துக் கட்டமைப்பு வசதிகளுடன் பள்ளி அமைந்துள்ளது. அனைத்து வகுப்பிலும் மேக்ஸ் ஹப் ஸ்மார்ட் வகுப்புடன் கூடிய வகுப்பறைகள் மழலையர் பிரிவு முதல் செயல் வழி கற்றல் வழங்கப்பட்டு வருகிறது.
கணினி தொழில்நுட்பத்தை மாணவர் அறிந்து கொள்ளும் வகையில், கணினி கோடிங் வகுப்புகள் வழங்கப்பட்டு, கணினி வழி சான்றிதழ் வகுப்புகள் மற்றும் மத்திய மனிதவள மேம்பாடு பாடத்திட்டத்தின் படி அட்டல் டிங்கரிங்க் ரோபாட்டிக் ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது.
சிலம்பம், கராத்தே, கிரிக்கெட், உள்ளிட்ட விளையாட்டுகளில் பயிற்சி அளிக்கிறோம். திறனை மேம்படுத்த பரதநாட்டியம், ஓவியம், வாய்ப்பாட்டு போன்ற பயிற்சிகளும் வழங்குகிறோம். மாவட்ட, மாநில அளவிலான விளையாட்டுப் போட்டி மற்றும் இலக்கியப் போட்டியில் பங்குபெற தனிப் பயிற்சியும்,பொது அறிவுத்திறனை வளர்த்துக் கொள்ள மாணவர்களை மூன்று குழுக்களாக பிரித்து பொது அறிவு வகுப்பும் நடத்துகிறோம். ஆண்டுதோறும் நுாறு சதவீதத்துடன் சிறந்த மதிப்பெண் பெற்று மாணவர்கள் சாதனைப் புரிந்து வருகின்றனர். மழலையர் பிரிவு முதல் +1 வரை சேர்க்கைக்கு, 99430 26266 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, அவர் கூறினார்.