எஸ்.ஆர்.கே., பிரசாத் கோப்பை: கிரிக்கெட் போட்டிகள் துவக்கம்
எஸ்.ஆர்.கே., பிரசாத் கோப்பை: கிரிக்கெட் போட்டிகள் துவக்கம்
ADDED : மார் 19, 2024 12:31 AM
கோவை;இன்ஜி., மாணவர்களுக்கு, மாவட்ட அளவில் நடக்கும் கிரிக்கெட் போட்டிகள் சி.ஐ.டி., கல்லுாரி மைதானத்தில் துவங்கின.
சி.ஐ.டி., கல்லுாரியின் உடற்கல்வித்துறை சார்பில், மூன்றாம் ஆண்டு 'டாக்டர் எஸ்.ஆர்.கே. பிரசாத் நினைவு அலுமினி கோப்பை' விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன.
மாணவ மாணவியருக்கு பூப்பந்து, கபடி, கூடைப்பந்து, வாலிபால், கால்பந்து, கிரிக்கெட், தடகளம்,டேபிள் டென்னிஸ், செஸ், கோ கோ, ஹேண்ட்பால், டென்னிஸ், ஹாக்கி, த்ரோபால் ஆகிய போட்டிகள் நடக்கின்றன. இதன் கிரிக்கெட் போட்டி கடந்த 17ம் தேதி துவங்கியது. 16 கல்லுாரி அணிகள் பங்கேற்றுள்ளன.
முதல் போட்டியில், சி.ஐ.டி., கல்லுாரி அணி 7 விக்கெட் வித்தியாசத்தில், பார்க் இன்ஜி., கல்லுாரி அணியையும், இரண்டாம் போட்டியில் அரசு தொழில்நுட்ப கல்லுாரி அணி 109 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்.வி.எஸ்., கல்லுாரியையும், என்.ஜி.பி., கல்லுாரி அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் டி.சி.இ., கல்லுாரியையும் வீழ்த்தி, இரண்டாம் சுற்றுப்போட்டிக்கு முன்னேறின.
