/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
எஸ்.ஆர்.எம்., பிரைம் மருத்துவமனை சென்னை ராமாபுரத்தில் துவக்கம்
/
எஸ்.ஆர்.எம்., பிரைம் மருத்துவமனை சென்னை ராமாபுரத்தில் துவக்கம்
எஸ்.ஆர்.எம்., பிரைம் மருத்துவமனை சென்னை ராமாபுரத்தில் துவக்கம்
எஸ்.ஆர்.எம்., பிரைம் மருத்துவமனை சென்னை ராமாபுரத்தில் துவக்கம்
ADDED : மே 02, 2025 01:19 AM

சென்னை:சென்னை ராமாபுரத்தில், பல்நோக்கு நவீன வசதிகளுடன், எஸ்.ஆர்.எம்., பிரைம் மருத்துவமனை துவக்கப்பட்டுள்ளது.
சென்னை ராமாபுரத்தில், 300க்கும் மேற்பட்ட படுக்கைகள் மற்றும் நவீன தொழில்நுட்பங்களை கொண்ட, எஸ்.ஆர்.எம்., பிரைம் மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. இம்மருத்துவமனையை, எஸ்.ஆர்.எம்., குழும நிறுவனரும், வேந்தருமான டி.ஆர்.பாரிவேந்தர் திறந்து வைத்தார்.
இதுகுறித்து, எஸ்.ஆர்.எம்., குழும வேந்தர் பாரிவேந்தர் கூறியதாவது:
நீண்ட காலமாக கல்வியில் முன்னோடியாக இருந்து வரும் அதே வேளையில், சுகாதார பராமரிப்பிலும் எங்கள் கவனத்தை தொடர்ந்து விரிவுபடுத்தி வருகிறோம். இந்த முதன்மையான பல்நோக்கு மருத்துவமனை, உயர்தர மருத்துவ சேவைகளை வழங்குவதில் முக்கிய மைல் கல்லாக உள்ளது. இங்கு, 75க்கும் மேற்பட்ட அதிநவீன சிறப்பு தீவிர சிகிச்சை பிரிவுகள், ஏழு அறுவை சிகிச்சை அரங்கங்கள் உள்ளிட்ட வசதிகளுடன், சமூகத்தில் அனைத்து தரப்பு மக்களுக்கும் ஏற்ற வகையில், மருத்துவமனையில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில், மருத்துவமனை தலைவர் ஆர்.சிவகுமார், துணை தலைவர் கீதா சிவகுமார் மற்றும் இணை தலைவர் நிரஞ்சன் ஆகியோர் இருந்தனர்.