/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
எஸ்.எஸ்.வி.எம். விதான் பள்ளியில் என்.சி.சி.
/
எஸ்.எஸ்.வி.எம். விதான் பள்ளியில் என்.சி.சி.
ADDED : ஜன 31, 2026 05:17 AM

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அடுத்த மோத்தேபாளையத்தில் எஸ்.எஸ்.வி.எம். விதான் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு தேசிய மாணவர் படை (என்.சி.சி.,) துவக்க விழா நடந்தது. பள்ளியின் செயலாளர் மோகன்தாஸ் துவக்கி வைத்தார். இதில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும், 50 மாணவர்கள் சேர்ந்தனர்.
விழாவில் கோவை தேசிய மாணவர் படை கமாண்டர் லெப்டினன்ட் கர்னல் தீபக் பேசுகையில், நாட்டுப்பற்று, சமூக பற்று என்பது, ஏதோ ஒரு லட்சியம் அல்ல. அது ஒவ்வொரு மனித உணர்வுகளிலும், வெள்ளமாக ஓடிக் கொண்டிருக்கும் ரத்தக்கலவை. சமத்துவம், சகோதரத்துவம், சமதர்மம் மற்றும் சுதந்திரம் இவை அனைத்தையும், ஒரு குழந்தை வளரும்போது, மாணவர் பருவத்தில் வழங்க என்.சி.சி. பயிற்சி உதவும் என்றார்.

