/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
எஸ்.எஸ்.வி.எம்., வேர்ல்டு பள்ளி 14வது ஆண்டு விழா
/
எஸ்.எஸ்.வி.எம்., வேர்ல்டு பள்ளி 14வது ஆண்டு விழா
ADDED : ஜன 30, 2024 12:23 AM
கோவை:வெள்ளலுார், எஸ்.எஸ்.வி.எம்., வேர்ல்டு பள்ளியில், 14வது ஆண்டுவிழா நடந்தது. சிறப்பு விருந்தினராக, முன்னாள் இந்திய தலைமை நீதிபதி சதாசிவம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
அவர் பேசுகையில், ''தரமான கல்வியே முன்னேற்றத்தை வழிவகுக்கும். மாணவர்களிடம் அறிவுசார்ந்த புதுமையான திறன்களை, ஆசிரியர்கள் ஊக்குவிக்க வேண்டும். மனத்தூய்மை, பொறுமை, விடாமுயற்சி மாணவர்களுக்கு வெற்றியை தேடித்தரும், '' என்றார்.
கடந்த பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்கள், பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு, பரிசுகள் வழங்கப்பட்டன.
எஸ்.எஸ்.வி.எம்., கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் மணிமேகலை, நிர்வாகச் செயலாளர் மோகன்தாஸ், நிர்வாக இயக்குனர்கள் ஸ்ரீஷா, நித்தின், முதல்வர், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.