/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
புனித லுாக்கா தேவாலயம் தேர்த்திருவிழா கோலாகலம்
/
புனித லுாக்கா தேவாலயம் தேர்த்திருவிழா கோலாகலம்
ADDED : ஜன 28, 2024 09:27 PM
வால்பாறை:வால்பாறை புனித லுாக்கா தேவாலயத்தேர்த்திருவிழாவில், நுாற்றுக்கணக்கான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டனர்.
வால்பாறை கோ -ஆப்ரெடிவ் காலனியில் உள்ள புனித லுாக்கா தேவாலயத்தேர்த்திருவிழா கடந்த, 18ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
விழாவில் நேற்று முன் தினம், காலை, 7:00 மணிக்கு திருப்பலியும், மாலை, 4:30 மணிக்கு ஆடம்பர திருவிழா திருப்பலியும் நடந்தது. தொடர்ந்து அருட்தந்தை ஜியோ குன்னத்து பரம்பில், சிறப்பு மறையுரையாற்றினார்.
இரவு, 7:00 மணிக்கு புனிதசெபாஸ்தியார் மற்றும் அன்னை ஆரோக்கிய மாதாவின் திருவுருவம் தாங்கிய தேர்பவனி, வால்பாறை நகரின் முக்கிய வீதிவழியாக சென்று, இரவு ஆலயத்தை சென்றடைந்தது.
விழாவில் நேற்று காலை, 7:00 மணிக்கு திருப்பலியும், மாலை, 4:30 மணிக்கு ஆடம்பர திருவிழா திருப்பலியும் நடந்தது.
விழாவிற்கான ஏற்பாடுகளை, ஆலயபங்கு தந்தை ஜிஜோதாமஸ்மலப்பிரவனால், திருவிழா ஒருங்கிணைப்பாளர்கள் ஷாஜூமூலன், ஷாஜிமலேயக்கல், ஆலய நிர்வாகிகள் பென்னிகலம்பரத், பேபிமஞ்ஞளி ஆகியோர் செய்திருந்தனர்.