/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காரமடையில் புனித மகதலா மரியா தேர்த்திருவிழா
/
காரமடையில் புனித மகதலா மரியா தேர்த்திருவிழா
ADDED : ஜூலை 28, 2025 09:42 PM

மேட்டுப்பாளையம்; காரமடையில் புனித மகதலா மரியா தேர்த்திருவிழா நடந்தது.
காரமடையில் கோவை சாலையில், புனித மகதலா மரியா ஆர்.சி. கிறிஸ்தவ ஆலயம் உள்ளது. இங்கு தேர் திருவிழாவை முன்னிட்டு, கோவை புனித சூசையப்பர் குருமட அதிபர் பாதிரியார் கிறிஸ்டோபர் திருப்பலியை நிறைவேற்றி கொடியை ஏற்றி வைத்து, விழாவை துவக்கி வைத்தார்.
நான்கு நாட்கள் நவநாள், திருப்பலி, மறையுரை ஆகியவை நடந்தன. திருவிழா திருப்பலி, 27ம் தேதி காலை 8:30 மணிக்கு பாதிரியார் திசை ஜெரி தலைமையில் நடந்தது. மாலை, 5:30 மணிக்கு தேர் திருவிழா சிறப்பு திருப்பலியை, கோவை ஆயர் இல்ல வழக்கறிஞர் பாதிரியார் வினோத் தலைமையில் நடந்தது. இதில் மேட்டுப்பாளையம் அந்தோணியார் ஆலய பாதிரியார் பிலிப் உட்பட ஏராளமான, பாதிரியார்கள் பங்கேற்று திருப்பலியை நிறைவேற்றினர். அதை தொடர்ந்து மகதலா மரியா திருஉருவம் தாங்கிய மின் அலங்காரத் தேர் பவனி, ஆலயத்தில் இருந்து புறப்பட்டு, காரமடை மேம்பாலம் வரை சென்று, மீண்டும் ஆலயத்தை அடைந்தது. பின்பு நற்கருணை ஆசீர் வழங்கப்பட்டது. விழாவில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை பங்கு பாதிரியார் ஜான் யேசு சிஜு மற்றும் பங்கு மக்கள் செய்திருந்தனர்.