sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மார்ச் 11, 2026 ,மாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மாணவர்களுக்கு கத்திக்குத்து; எட்டு பேர் மீது வழக்கு

/

மாணவர்களுக்கு கத்திக்குத்து; எட்டு பேர் மீது வழக்கு

மாணவர்களுக்கு கத்திக்குத்து; எட்டு பேர் மீது வழக்கு

மாணவர்களுக்கு கத்திக்குத்து; எட்டு பேர் மீது வழக்கு


ADDED : அக் 24, 2024 11:27 PM

Google News

ADDED : அக் 24, 2024 11:27 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : தேனி மாவட்டத்தை சேர்ந்த செந்தில்குமாரின் மகன், ராகுல், 18. இவர், சவுரிபாளையம், அண்ணா நகர் பகுதியில் நண்பர்களுடன் அறை எடுத்து தங்கி, பீளமேடு பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லுாரியில் இரண்டாம் ஆண்டு பி.காம்., படித்து வருகிறார். அதே கல்லுாரியில் திருநெல்வேலியை சேர்ந்த 17 வயது மாணவர் முதலாம் ஆண்டு பி.பி.ஏ., படித்து வருகிறார்.

இந்நிலையில், இருவருக்கும் இடையே ஜூனியர் - சீனியர் தகராறில் முன்விரோதம் ஏற்பட்டது. இந்நிலையில், கடந்த 19ம் தேதி கல்லுாரி அரங்கில் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. சக மாணவர்கள் சமாதானப்படுத்தி அனுப்பினர்.

கடந்த 23ம் தேதி அதிகாலை 5 மணியளவில், ராகுல் தங்கியிருக்கும் அறைக்கு சென்ற சில மாணவர்கள் ராகுல், அவரது நண்பர்கள் தினேஷ் பாண்டியன், ரோஷன் ராஜா ஆகியோரை தாக்கி, கத்தியில் குத்தியுள்ளனர்.

மாணவர்களின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். காயமடைந்த மூவரையும் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இது குறித்து, ராமநாதபுரம் போலீசார் எட்டு பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us