/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தண்டவாளத்தின் உறுதி தன்மை ஆய்வு
/
தண்டவாளத்தின் உறுதி தன்மை ஆய்வு
ADDED : செப் 20, 2024 10:13 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு மற்றும் பிற பகுதிகளில் ரயில் தண்டவாளத்தின் உறுதி தன்மையை அறிய நேற்று ஆய்வு நடந்தது.
பொள்ளாச்சி மற்றும் கிணத்துக்கடவு பகுதியில், இரண்டு மாதத்திற்கு ஒரு முறை ரயில் தண்டவாளம் ஆய்வு செய்யப்படுகிறது. நேற்று முன்தினம், தண்டவாளத்தின் உறுதி தன்மை, திண்டுக்கல், பொள்ளாச்சி, பாலக்காடு பகுதிகளில் சோதனை செய்யப்பட்டது. இதை தொடர்ந்து, மீண்டும் பாலக்காடு, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, ஈரோடு வரை தண்டவாளத்தின் உறுதி தன்மை ஆய்வு செய்யபப்ட்டது. இதன் வாயிலாக, தற்போது இயக்கப்படும் ரயிலின் வேகம் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.