/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
எஸ்.டி.ஏ.டி., கோடைகால பயிற்சி முகாம் நிறைவு
/
எஸ்.டி.ஏ.டி., கோடைகால பயிற்சி முகாம் நிறைவு
ADDED : மே 17, 2025 01:20 AM
கோவை : எஸ்.டி.ஏ.டி., சார்பில் நடந்த இலவச கோடைகால பயிற்சி முகாமில், 350 மாணவ, மாணவியர் பயனடைந்தனர்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (எஸ்.டி.ஏ.டி.,) சார்பில் கோவை மாவட்ட அளவிலான கோடை கால பயிற்சி முகாம் கடந்த ஏப்., 25 துவங்கி நேற்று முன்தினம் வரை நடந்தது. 21 நாட்களுக்கு காலை, மாலை என இரு வேளையும் நடந்த முகாமில், 350 மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
இவர்களுக்கு கால்பந்து, இறகுப்பந்து, கூடைப்பந்து, வாலிபால் உள்ளிட்ட விளையாட்டுகளுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டன. நேரு ஸ்டேடியத்தில் தடகள பயிற்சியும், அருகே மாநகராட்சி மைதானத்தில் கூடைப்பந்து, வாலிபால், இறகுப்பந்து பயிற்சியும் அளிக்கப்பட்டது.
இதில், 18 வயதுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் ஆர்வமுடன் பங்கேற்றனர். முற்றிலும் இலவசமாக பயிற்சி அளிக்கப்பட்ட நிலையில், இறுதி நாளன்று மாவட்ட விளையாட்டு அலுவலர் புவனேஸ்வரி மாணவ, மாணவியருக்கு பங்கேற்பு சான்றிதழ்கள் வழங்கினார்.