ADDED : பிப் 06, 2026 05:06 AM
அ நிறம் | அளவு
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள, கோவனூர் அரசு நடுநிலைப்பள்ளியில் ரோட்டரி கிளப் சார்பில் அமைக்கப்பட்ட மேடை திறப்பு விழா நடந்தது.
கோயம்புத்தூர் ரோட்டரி கிளப் சார்பில், கோவனூர் அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தில், பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த மேடை கட்டப்பட்டுள்ளது. இதை ரோட்டரி கிளப்பை சேர்ந்த சஞ்சீவிகுமார் திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில், ரோட்டரி கிளப் மாவட்ட கவர்னர் ராஜசேகர், ரோட்டரி கிளப் யூனிகான் சுழல் சங்கத்தின் தலைவர் சுதர்சன், செயலாளர் கணேஷ், விஜய் கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவையொட்டி கலை நிகழ்ச்சிகள் நடந்தன. அன்னதானம் வழங்கப்பட்டது.
