/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உங்களுடன் ஸ்டாலின் திட்டம் விழிப்புணர்வு; நகராட்சியில் அதிகாரிகள் தீவிரம்
/
உங்களுடன் ஸ்டாலின் திட்டம் விழிப்புணர்வு; நகராட்சியில் அதிகாரிகள் தீவிரம்
உங்களுடன் ஸ்டாலின் திட்டம் விழிப்புணர்வு; நகராட்சியில் அதிகாரிகள் தீவிரம்
உங்களுடன் ஸ்டாலின் திட்டம் விழிப்புணர்வு; நகராட்சியில் அதிகாரிகள் தீவிரம்
ADDED : ஜூலை 15, 2025 08:46 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி நகராட்சியில், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் குறித்து விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது.
பொள்ளாச்சி நகராட்சியில், 'உங்களுடன் ஸ்டாலின் திட்டம்' வரும், 18ம் தேதி துவங்குகிறது. வடுகபாளையம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமண மண்டபத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில், 1,2வது வார்டுகளுக்கு நடக்கிறது.
இந்த முகாம் குறித்து வடுகபாளையம் பகுதியில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு பிரசாரம் முறையாக நடக்கிறதா என நகராட்சி கமிஷனர் கணேசன் ஆய்வு செய்தார்.
நகராட்சி கமிஷனர் கணேசன் கூறியதாவது: பொள்ளாச்சி நகராட்சியில், 14 முகாம்கள் நடத்தப்படுகின்றன. முதற்கட்டமாக ஐந்து முகாம்கள் நடக்கின்றன. வரும், 18ல், 1மற்றும்,2வது வார்டுகளுக்கு நடக்கிறது.
தொடர்ந்து, வரும்,25ம் தேதி 3,4 வார்டுகளுக்கு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமண மண்டபத்திலும்; வரும், 1ம் தேதி மகாலிங்கபுரம் மீனாட்சி திருமண மண்டபத்தில், 5,6,7 ஆகிய வார்டுகளுக்கும்; வரும் அக்., 7ல் ரோட்டரி சமூக மையத்தில், 8,9,10 வார்டுகளுக்கும்; வரும், 13ம் தேதி பல்லடம் ரோடு பழனியப்பா மஹாலில், 11,20,21 ஆகிய வார்டுகளுக்கும் நடக்கிறது.
முகாம்கள் குறித்து, 36 வார்டுகளுக்கு நகராட்சி பணியாளர்கள் மற்றும், 60 தன்னார்வலர்கள் வாயிலாக விழிப்புணர்வு பிரசாரம் ஏற்படுத்தப்படுகிறது.
வீடு, வீடாகச்சென்று பொதுமக்களிடம் முகாம் குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரம், மாதிரி விண்ணப்ப படிவம் இணைத்து வழங்கப்படுகிறது. தன்னார்வலர்கள், மொபைல் ஆப் வாயிலாக அந்தந்த வீடுகள் முன்பு போட்டோ எடுத்து பதிவிட அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடக்கிறது.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.