/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் மனு 45 நாட்களில் தீர்வு; கலெக்டர் உறுதி
/
'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் மனு 45 நாட்களில் தீர்வு; கலெக்டர் உறுதி
'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் மனு 45 நாட்களில் தீர்வு; கலெக்டர் உறுதி
'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் மனு 45 நாட்களில் தீர்வு; கலெக்டர் உறுதி
ADDED : ஜூலை 13, 2025 05:44 AM
கோவை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தில், நாளை மறுதினம் (15ம் தேதி), கோவை மாவட்டத்தில், நான்கு கட்டங்களாக, 334 முகாம்கள் நடத்தப்படும். இவற்றில் பெறப்படும் மனுக்களுக்கு, 45 நாட்களில் தீர்வு காணப்படும் என, கலெக்டர் உறுதியளித்துள்ளார்.
அவர் கூறியதாவது:
கோவை மாவட்டத்தில் அனைத்து துறைகளின் சேவைகளும் மக்களை சென்றடையும் வகையில், 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் நடத்தப்படவுள்ளது.
நான்கு கட்டங்களாக, மொத்தம், 334 முகாம்கள் நடைபெற உள்ளன. 1,694 தன்னார்வலர்கள் வீடு வீடாகச் சென்று படிவங்கள் வழங்கி, விளக்குவர்.
விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள சேவை தேவைப்பட்டால், எழுதிக் கொடுக்கலாம். வேறு சேவையெனில், அதை சுருக்கமாக எழுதித் தரலாம்.
முகாம்களில், மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்கள் வழங்கப்படும். எங்கெங்கு எந்தெந்த தேதிகளில் முகாம் நடத்தப்படும் என்பது, அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் மூலம் தெரியப்படுத்தப்படும்.
மருத்துவ முகாம் மட்டுமின்றி, காவல்துறை சார்பிலும், 'மே ஐ ஹெல்ப் யூ' என்ற பெயரில் முகாம் நடத்தப்படும்; காவல்துறை உதவி தேவைப்பட்டால், அதற்கான தேவையை குறிப்பிட்டு, கொடுக்கலாம்.
பெறப்படும் மனுக்கள் மீது, 45 நாட்களுக்குள் தீர்வு ஏற்படுத்தப்படும். அனைத்து துறை அதிகாரிகளும் முகாமில் இருப்பர். இ-சேவை மையம் செயல்படும்.
சான்றிதழ்கள் தேவைப்பட்டால், உடனுக்குடன் வழங்க ஏற்பாடு செய்யப்படும். மின்வாரியத்தில் பெயர் மாற்றம் தொடர்பான கோரிக்கை எனில், அதேயிடத்தில் விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு, கலெக்டர் கூறினார்.