/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்; கிராமம் வாரியாக தேதி அறிவிப்பு
/
'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்; கிராமம் வாரியாக தேதி அறிவிப்பு
'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்; கிராமம் வாரியாக தேதி அறிவிப்பு
'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்; கிராமம் வாரியாக தேதி அறிவிப்பு
ADDED : ஜூலை 17, 2025 10:00 PM
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு வட்டாரத்தில், இம்மாதம் 25ம் தேதி முதல் ஆக., 12ம் தேதி வரை, 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் நடக்கிறது.
தமிழகம் முழுவதும், 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் நடக்கிறது. இதில், நேற்று முன்தினம் கிணத்துக்கடவு பகுதியில் முகாம் துவங்கியது. வரும், 25ம் தேதியன்று, கிணத்துக்கடவு செக்போஸ்ட் பகுதியில் உள்ள (எல்.ஜெ.ஜெ.,) தனியார் திருமண மண்டபத்தில், கொண்டம்பட்டி, அரசம்பாளையம், சொலவம்பாளையம் ஆகிய ஊராட்சிகளில் முகாம் நடக்கிறது.
ஆக., மாதம் 8ம் தேதி, நெ.10. முத்தூரில் உள்ள ஆர்.கே.என்., மண்டபத்தில், தேவராயபுரம் கோவிந்தாபுரம் நெ.10. முத்தூர் ஊராட்சிகளுக்கு முகாம் நடக்கிறது. 9ம் தேதி, கோவில்பாளையம் சுமங்கலி திருமண மண்டபத்தில், கோவில்பாளையம், மேட்டுப்பாளையம், முள்ளுப்பாடி, சூலக்கல், குளத்துப்பாளையம் ஊராட்சிகளுக்கு முகாம் நடக்கிறது.
வரும், 12ம் தேதி, கோவில்பாளையம் எஸ்.எம்.ஆர்., திருமண மண்டபத்தில் தேவணாம்பாளையம், கக்கடவு, காளியாளம்பாளையம், சோழனூர், வரதனூர் ஆகிய ஊராட்சிகளுக்கு முகாம் நடக்கிறது.
முகாம்களில் கிராம மக்கள் பங்கேற்று, அரசின் பல்வேறு திட்டங்களுக்கு மனு கொடுக்கலாம். மகளிர் உரிமைத்தொகை பெற பெண்கள் விண்ணப்பிக்கலாம். கிராம மக்கள் இந்த முகாமை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இத்தகவலை, கிணத்துக்கடவு ஒன்றிய அதிகாரிகள் தெரிவித்தனர்.