/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'உங்களுடன் ஸ்டாலின்' மக்களை ஏமாற்றும் திட்டம்! மத்திய அமைச்சர் முருகன் சாடல்
/
'உங்களுடன் ஸ்டாலின்' மக்களை ஏமாற்றும் திட்டம்! மத்திய அமைச்சர் முருகன் சாடல்
'உங்களுடன் ஸ்டாலின்' மக்களை ஏமாற்றும் திட்டம்! மத்திய அமைச்சர் முருகன் சாடல்
'உங்களுடன் ஸ்டாலின்' மக்களை ஏமாற்றும் திட்டம்! மத்திய அமைச்சர் முருகன் சாடல்
ADDED : ஜூலை 16, 2025 11:37 PM
அவிநாசி: ''உங்களுடன் ஸ்டாலின்' மக்களை ஏமாற்றும் திட்டம்,' என்று மத்திய அமைச்சர் முருகன் தெரிவித்தார்.
கோவை வடக்கு மாவட்ட பா.ஜ., சார்பில் சமூக வலைதள செயல்பாட்டாளர்கள் சந்திப்பு, அணைப்புதுாரில் நேற்று முன்தினம் இரவு நடந்தது. பா.ஜ., மாநில சிந்தனையாளர் பிரிவின் செயலாளர் கணியாம்பூண்டி செந்தில் தலைமை தாங்கினார்.
இதில் பங்கேற்ற மத்திய செய்தி மற்றும் ஒளிபரப்பு துறை இணை அமைச்சர் முருகன் பேசியதாவது:
சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று கடந்த நான்கு ஆண்டுகளாக கொடுத்த வாக்குறுதிகளை எதுவும் நிறைவேற்ற வில்லை. தற்போது, 'உங்களுடன் ஸ்டாலின்,' திட்ட முகாமை தி.மு.க.,வினர் மக்களிடையே எடுத்துச் செல்கின்றனர்.
இது முற்றிலும் மக்களை ஏமாற்றும் செயல். அனைத்து பெண்களுக்கும் உரிமைத் தொகை கிடைக்கும் என்றனர். ஆனால், பெரும்பாலான பெண்களுக்கு கிடைக்கவில்லை.
இப்போது, உரிமை தொகை திட்டத்தில் தளர்வு கொடுத்து உரிமை தொகை வழங்குவோம் என்கின்றனர். தேர்தல் சமயத்தில் அளித்த வாக்குறுதிகளில், நிறைவேற்றாமல் தி.மு,க., அரசு மக்களை ஏமாற்றுகிறது. முதல்வர் ஸ்டாலினின் அதிகாரத்தில் உள்ள காவல்துறை,அவருடைய முழு கட்டுப்பாட்டில் இல்லை. தமிழகத்தில் காவல்துறை நியாயமாக இயங்குகிறதா என்பது கேள்விக்குறியாக உள்ளது. சாதாரண மக்கள் போலீஸ் ஸ்டேஷன் செல்வதற்கு அஞ்சுகின்றனர்.
கடந்த நான்கு ஆண்டில் மட்டும், 23 இறப்புகள் போலீசார் மூலம் நடைபெற்று உள்ளது. அனைத்து துறையிலும் விலைவாசியை ஏற்றி பொதுமக்களை பெருமளவில் துயரத்திற்கு, முதல்வர் தள்ளியுள்ளார். மனமகிழ் மன்றம் என்ற பெயரில் அதிக அளவில் மதுபான விற்பனையை அதிகப்படுத்தியுள்ளது தான், தி.மு.க.,வின் சாதனை.
இவ்வாறு அவர் பேசினார்.