/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தபால் தலை வடிவமைக்கும் போட்டி; மாணவர்களும் பங்கேற்க அழைப்பு
/
தபால் தலை வடிவமைக்கும் போட்டி; மாணவர்களும் பங்கேற்க அழைப்பு
தபால் தலை வடிவமைக்கும் போட்டி; மாணவர்களும் பங்கேற்க அழைப்பு
தபால் தலை வடிவமைக்கும் போட்டி; மாணவர்களும் பங்கேற்க அழைப்பு
ADDED : ஜூலை 06, 2025 11:51 PM
கோவை; ஐ.நா., சபையின் 80வது ஆண்டு விழாவை முன்னிட்டு, இந்திய தபால் துறை சார்பாக, UN@80 and india's leadership in building our future through multilateralism, global leadership and stewardship' என்ற பெயரில், தபால் தலை வடிவமைக்கும் போட்டி நடக்கிறது.
ஐ.நா.,வின் 80வது ஆண்டு விழா, ஐ.நா., - இந்தியா கூட்டாண்மையின் நீடித்த சாதனைகளை பற்றி சிந்திக்க ஒரு வாய்ப்பையும், எதிர்காலத்தை வடிவமைப்பதில் இந்தியாவின் தலைமையை எதிர்நோக்குவதற்கான ஒரு வாய்ப்பையும் வழங்குகிறது.
போட்டியில், மத்திய, மாநில அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில், ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவர்களும், ஓவிய கல்லுாரியில் பயிலும் மாணவர்களும் பங்கேற்கலாம். ஆக., 15 வரை நடத்தப்படுகிறது.
குறிப்பிட்ட தலைப்பில், ஓவியத்தாள்களில் (ஏ4 அளவு, 200 ஜி.எஸ்.எம்., வெள்ளை நிறம்) கிரேயான், பென்சில் வண்ணங்கள், நீர் வண்ணங்கள், அக்ரிலிக் வண்ணங்கள் ஆகியவற்றின் வாயிலாக வரைய வேண்டும் என, கோவை தபால் கோட்ட கண்காணிப்பாளர் சிவசங்கர் அழைப்பு விடுத்துள்ளார்.
விபரங்களுக்கு: 0422 - 2382 930.