/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அமெரிக்காவுக்கு எதிரான நிலைப்பாடு; விவசாய கூட்டமைப்பு வரவேற்பு
/
அமெரிக்காவுக்கு எதிரான நிலைப்பாடு; விவசாய கூட்டமைப்பு வரவேற்பு
அமெரிக்காவுக்கு எதிரான நிலைப்பாடு; விவசாய கூட்டமைப்பு வரவேற்பு
அமெரிக்காவுக்கு எதிரான நிலைப்பாடு; விவசாய கூட்டமைப்பு வரவேற்பு
ADDED : ஆக 07, 2025 09:39 PM
கோவை; அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியாவின் மீது 50 சதவீத வரி விதித்துள்ள நிலையில், பிரதமர் மோடி, மரபணு மாற்றம் செய்யப்பட்ட அமெரிக்க வேளாண் பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதியளிப்பதில்லை என்பதில், இந்தியா உறுதியாக உள்ளது' என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தியாவை பொறுத்தவரை, இந்தியவிவசாயிகளின் நலனுக்கே முன்னுரிமை. விவசாயிகள், மீனவர்கள், பால் விவசாயிகளின் நலன்களில், இந்தியா ஒரு போதும் சமரசம் செய்யாது. விவசாயிகள் நலனை பாதுகாக்க அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும். அதற்கு தயாராக இருக்கிறேன்,'' என, பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்புக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
இதுகுறித்து, தமிழ்நாடு இயற்கை விவசாய கூட்டமைப்பு தலைவர் செல்வம் கூறியதாவது:
அமெரிக்காவின் மரபணு மாற்றப்பட்ட மக்காச்சோளம் மற்றும் சோயாபீன் இறக்குமதிக்கு இந்தியா அனுமதி மறுத்துள்ளது, வரவேற்புக்குரியது. இந்நிலை இப்படியே தொடர வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.